வெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

வெலிங்கடன் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு வேலை வாய்ப்ப்பு அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் மாவட்டத்தில் வரும் இராணுவ பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள பணியின் பெயர் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் ஆகும்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 3 ஆகும்.

வெலிங்கடன் ராணுவ மையத்தில் பணி செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். வெலிங்டன் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்களுக்கு ரூபாய் 18000 சம்பளம் வழங்கப்படுகின்றது .
வெலிங்கடன் வேலை வாய்ப்பு மையத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 18 முதல் 25 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மேலும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இராணுவ மையத்தில் பணியிடம் பெற விரும்வுவோர்கள் உங்களுடைய சுய விவரங்கள் மற்றும் பள்ளி மற்றும் மற்ற சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

தி காமாண்டிங் ஆபிஸர் , ரெக்கார்ட்ஸ் தி மெட்ராஸ் ரெஜிமெண்ட் , வெலிங்கடன் முகவரிக்கு 643 231க்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அனுப்ப இறுதி தேதி 15.1.2018க்குள் அனுப்ப வேண்டும்.

வேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றது. 

சார்ந்த பதிவு :

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க

மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க

English summary
here article tell about job opportunity of Indian Army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia