ரயில்வேயில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு

Posted By:

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பை பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 26,502 பணியிடங்களுக்கு மேல் உள்ளது .

இந்திய ரயில்வே பணியிடங்கள் விவரம் :

இந்திய ரயில்வேயில் டெக்னிசியன் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்கள் 8829

அஸிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க 17763 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரயில்வேயில் அஸிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 19900 லெவல் 2, 7வது ஊதியக்குழு இணைப்பு சேர்த்து அதிகரிக்கும்.

டெக்னிசியன் பணிக்கு 19900 ரூபாய் சம்பளம் 7வது ஊதியக்குழு இணைப்பு சேர்த்து வழங்குதல்

தகுதி:

ரயில்வே பணியில் பணிவாய்ப்பு பெற 10வது தேர்ச்சி மற்றும் பிளஸ்2 முடித்து தகுந்த துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ பயிற்சியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வயது :

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 18 முதல் 28 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பில் தளர்வு:

எஸ்சி, எஸ்டி பிரிவில் 5வருடம்

பிசி பிரிவில் 3 வருடம்

மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பில் தகுதியுண்டு

தேர்வு:
ஆர்ஆர்பி ரயில்வே ரெக்ரூட்மெண்டில் வேலை வாய்ப்பு பெற கம்பியூட்டர் பேஸ்டு ஆப்டியூடு டெஸ்டினை தேர்ச்சி பெற வேண்டும்.

காமன் ஆப்டியூட் தேர்வானது இரு பணிகளுக்கும் பொதுவானது 60 நிமிடமான 1 மணி நேரம் நடக்கும். 75 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

முதல் ஸ்டேஜ் தேர்வில் வெற்றி பெற மேத்தமெட்டிக்ஸ் அத்துடன் ஜென்ரல் இண்டலிஜென்ஸ் அண்டு ரிசனிங், ஜென்ரல் சயின்ஸ்,, ஜென்ரல் அவார்னஸ் உடன் கர்ண்ட் அவார்னஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இரண்டாம் நிலை தேர்வு:

பஸ்ட் ஸ்டேஜ் தேர்வுக்கு கொடுக்கும் பதிலை போன்று இரண்டம் நிலை தேர்வுக்கும் பதில் கொடுக்க வேண்டும். முதல் நிலை தேர்வில் தேர்வு பெறுபவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அழைக்கப்படுபவார்கள். இரண்டாம் நிலை தேர்வு பார்ட் ஏ, பார்ட் பி என பிரிக்கப்படும்.

இரண்டாம் நிலை தேர்வில் மொத்தம் 90 நிமிடங்கள் கொடுக்கப்படும்,
மேத்தமெட்டிக்ஸ், ஜென்ரல் இண்டலிஜென்ஸ், பேசிக் சையின்ஸ் மற்றும் இன்ஜினியரிங். பேஸ்டில் இருக்கும். ஜென்ரல் நாலேஜ் கேள்விகள் கரண்ட் அபைர்ஸ் கேள்விகளும் உள்ளடங்கியிருக்கும்.

இதில் 35% மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெறலாம். உடல் தகுதி, சர்டிபிகேட் வெரிபிகேசன் என அனைத்தும் முடிந்த பிறகு  பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிக்கப்படும். 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பொது பிரிவினர், ஒபிசி பிரிவினர் 500 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

தேதிகள் :

இந்திய ரயில்வேயில் பணியிடம் பெற விண்ணப்பிக்க தொடக்க நாள் 3.2.2018 ஆகும்
இந்திய ரயில்வேயில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி 3.3.2018

தேர்வுகள் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும்.

அறிவிப்பு லிங்க்

இந்திய ரயில்வேயின் வேலை வாய்ப்பு அறிவிப்பு லிங்கினை கொடுத்துள்ளோம். மிகப்பெரிய அளவில் வேக்கன்ஸி லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாக படித்து விண்ணப்பிக்கவும்

அறிவிப்பு லிங்க்

நாடு முழுவதும் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் ஆர்ஆர்பி அறிவித்துள்ள வேலை வாய்ப்பை மேப்பாக ரிஜியன்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் ரிஜியன்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் முறை மாறும். 

விண்ணப்ப விவரம்:

விண்ணப்ப விவரம் குறித்து முழுமையாக படித்து விண்ணப்பிக்க தொடங்க  வேண்டும். தேவைப்படும் சான்றிதழ்கள் எது தேவை எந்த அளவில் அவை தேவை என அனைத்தும் அறிவிப்பில் பார்த்து தயாராக வைத்து கொள்ளவும். 

விண்ணப்பம்

ரயில்வே ரெக்ரூட்மெண்ட்டில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்  ஆர்ஆர்பி மெயின் சைட்டில் சென்று பாக்ஸில் உள்ள லிங்கினை கிளிக் செய்யவும் அதன்பின் விண்ணப்பிக்க ஆன்லைனில் கிடைக்கும். புகைப்படம், கையெப்பம் அத்துடன் தகவல்கள் சரியாக கொடுக்க வேண்டும். விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

சென்னையை பணியிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு


English summary
Article tells about Job opportunity Of Indian Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia