டிஎன்பிஎஸ்சியில் லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு வேலை வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சியில் லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

By Sobana

டிஎன்பிஎஸ்சியின் அஸிஸ்டெண்ட் கமிஸனர் லேபர் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுளோர் விண்ணப்பிக்கலாம்.

அஸிஸ்டெண்ட் லேபர் ஆபிஸ் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 10 ஆகும்.

லேபர் அஸிஸ்டெண்ட்  பணிக்கு டிகிரி மற்றும் சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் :

டிஎன்பிஎஸ்சியில் லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூபாய் 56,100 முதல் 1,77,500.

தேதிகள்:

தமிழ்நாடு லேபர் சர்வீஸ் துறைக்கு அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட தேதி 12.1.2018

அஸிஸ்டெண்ட் லேபர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 11.2.2108.

அஸிஸ்டெண்ட் லேபர் பணிக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதி தேதி 13.2.2018
டிஎன்பிஎஸ்சியின் லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு தேர்வு நடைபெறும் தேதி:29.4.2018

தேர்வு கட்டணம் :
டிஎன்பிஎஸ்சியின் லேபர் அஸிஸ்டெண்ட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் ரெஜிஸ்ட்ரேசன் தொகையாக 150 செலுத்தி ஐந்து வருடங்களுக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஐடியை பயன்படுத்தலாம்.

தேர்வு எழுத விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் மூன்று முறை தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஐந்துவருடங்களுக்கான பதிவு ஐடி கட்டணம் செலுத்தினால் போதுமானது ஆகும்.

தேர்வு:
டிஎன்பிஎஸ்சியின் லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அஸிஸ்டெண்ட் லேபர் பணிக்கு எழுத்து தேர்வுகள் ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறும். தாள் 1, தாள்2, எனப் பிரித்து காலை மற்றும் மதியம் என தேர்வு நடைபெறும்.

பாடங்கள்:
லேபர் பணிக்கு பேபர்1ல் சோசியல் லா, லேபர் லா சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். பேப்பர் 2இல் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நேரம்:
லேபர் பணிக்கான தாள்1, ஏப்ரல் 29.4.2018 காலை 10மணிக்கு தொடங்கி நண்பகல் 1மணிக்கு முடியும். மேலும் லேபர் பணிக்கான தாள்2, அதே நாளில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு தேர்வு முடிவடையும்.

லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கான தாள்1ல் கேள்விகள் டிகிரி லெவலில் இருக்கும்.
சோசியல் சையின்ஸ் லேபர் லா பாடப் பிரிவில் 200 கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் தேர்வு நேரத்துடன் மொத்தம் 300 மதிபெண்கள் கொண்டது.

தாள் 2ல் பொது அறிவு பாடப்பகுதியிலிருந்து மொத்தம்100 கேள்விகளில் 75 கேள்விகள் டிகிரி லெவலில் கேள்விகள் கேட்கப்படும் மீதமுள்ள 25 கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் 25 கேள்விகள் மெண்டல் எபிலிட்டி, ஆப்ட்டி பிரிவில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் 2 மணி நேரம் ஆகும். இரண்டாம் தாளுக்கான மொத்த மதிபெண்கள் 200 அறிவிக்கப்பட்டுள்ளது.

லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபர்வகள் இண்டர்வியூவுக்கு அழைக்க்ப்படுவார்கள். இண்டர்வியூவுக்கு மொத்தம் 70 மதிபெண்கள் வழங்கப்படும்.

வயது :
20 முதல் 30 வயதுவரையுள்ளோர் தேர்வு எழுதலாம்.
எஸ்சிஎஸ்டி எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் அதிகபட்ச வயது குறித்து அறிவிக்கப்படவில்லை.

கல்வி:

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைகழகத்தில் எம்ஏ லேபர் லா முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அல்லது ஏதேனும் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் பட்டம் அல்லது டிப்ளமோ இன் சோசியல் ஒர்க், சோசியல் சையின்ஸ், சோசியல் வெல்வேர் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

லேபர் லா, சட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் முழுவதுமாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணைய லிங்கினை கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி லேபர் அஸிஸ்டெண்ட் பணிக்கான அறிவிப்பு லிங்க்

சார்ந்த பதிவுகள்:

பிளஸ் 2 படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் அஸிஸ்டெண்ட் லெபாரட்டரி பணிவாய்ப்புபிளஸ் 2 படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் அஸிஸ்டெண்ட் லெபாரட்டரி பணிவாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
the article tells about Job opportunity of tnpsc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X