பிளஸ் 2 படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் அஸிஸ்டெண்ட் லெபாரட்டரி பணிவாய்ப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சியில் லெபாரட்டரி அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை.

டிஎன்பிஎஸ்சியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தேர்வு ஆணையமானது பாரன்சிக் சையின்ஸ் துறையில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவித்துள்ளது.

அஸிஸ்டெண்ட் லெபாரட்டரி பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 56 ஆகும்.

பார்ன்சிக் துறையில் பணிவாய்ப்பு பெறுவோர்களுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 62000/- அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரன்சிக் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 25.1.2018 ஆகும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 23.2.2018 ஆகும்.

பாரன்சிக் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள் :6.5.2018

பாரன்சிக் துறையில் லெபாரட்டரி பணிவாய்ப்பு பெற எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபபடுவார்கள்.

பாரன்சிக் துறையில் வேலை வாய்ப்பு பெற டிஎன்பிஎஸ்சியில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . ஆனால் முதல் முறையாக டிஎன்பிஎஸ்சியில் விண்ணப்பிக்கும் தேர்வர்களெனில் ரூபாய் 50 ஒன்டைம் ரெஜிஸ்ட்ரேசன் தொகையுடன் சேர்த்து 150 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகள், விதவையினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வை புதிதாக எழுதும் எம்பிசி, பிசி, முஸ்லீம் பிசி பிரிவினர்கள் முதல் மூன்று முறை விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மூன்றாவது முறை முடிந்து நான்காவது முறை தேர்வு எழுத தொடங்கும் போது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

எக்ஸ் சர்வீஸ்மேன்கள் இரண்டு முறை தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் அல்லது வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ் செலான் மூலம்  செலுத்தலாம்.

டிஎன்பிஎஸ்சியின் லெபாரட்டரி பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஎஸ்டி, ஒபிசி, பிசி பிரிவினருக்கு 10வருடம் எக்ஸம்சன் கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ் சர்வீஸ்மேன்கள் 48 வயதுவரை தேர்வு எழுதலாம்.

கல்வித்தகுதி:

பணிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். பிளஸ்2 வகுப்பில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜி, பாட்னி, ஜூவாலஜி பாடங்களை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்கள்.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெடிக்கல் பிட்னஸ் சான்று அளிக்க வேண்டும். மேலும் தமிழ் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பாரன்சிக் தேர்வு :

பிளஸ் 2 அறிவியல் துறையில் படித்து முடித்தவர்கள் பாரன்சிக் தேர்வுக்கு விண்ணப்பித்தப்பின் தேர்வுக்கு படிக்க வேண்டும் . பாரன்சிக் எழுத்து தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். மொத்தம் 300 மதிபெண்களை கொண்டது. பாரன்சிக் தேர்வுக்கான கேள்விகள் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜி பாடங்களிலிருந்து பிளஸ்2 தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியின் கேள்விகள் எஸ்எஸ்எல்சி தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு மையங்கள் :

பாரன்சிக் தேர்வுக்கான தேர்வு மையங்கள் தமிழ் நாட்டில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட 8 இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை :

டிஎன்பிஎஸ்சியின் பாரன்சிக் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தகுதியான
தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அட்மிட் கார்டு பெறலாம். மொபைல் மற்றும் மற்ற எலக்ட்ரிக்கல் சாதனங்கள், புத்தகங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்ல்லை.

டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.

இணைய இணைப்புடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

ஆவின் நிறுவனத்தின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
an article tells about Job opportunity of Tnpsc Laboratory

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia