சென்னையில் ரேசன் கடையில் வேலை வேண்டுமா பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னையில் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்படட் பணியடங்களின் எண்ண்க்கை 290 ஆகும்.

சென்னை ரேசன் கடையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் அறிவிக்கப்பட்ட ரேசன் கடையின் பணியிட்ங்களின் பெய்ரகள்
சேல்ஸ் பர்சன் = 175 பணியிடங்கள்
பேக்கர் = 115 பணியிடங்கள்

ரேசன் கடைப்பணிக்கு வேலை பெற கல்வித்தகுதியானது பனிரெண்டாம் வகுப்பு படித்து பாஸ் செய்திருக்க வேண்டும். இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மேலும் பேக்கர் பணியினை ரேசன் கடையில் செய்வோர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :
சென்னை ரேசன் கடையில் வேலை செய்வோர்கள் ரூபாய் மாதச் சம்பளமாக 5000 தொகை பெறலாம். அத்துடன் வேலை செய்யும் இடம் சென்னை என அறிவிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. சேல்ஸ் மேன் பணிக்கு ரூபாய் 5000 சம்பளமாக பெறுவதுடன் 12000 தொகை இரண்டாம் ஆண்டு மற்றும் அனுபவத்தில் அதிகரித்து பெறலாம். பேக்கர் பணியாளர் ரூபாய் முதல் வருடத்தில் 3,900 முதல் 11000 தொகை வரை அதிகரித்து பெறலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முப்பது வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . அராசாங்க விதிமுறைப்படி அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24 ஆம் தேதி 2018க்குள் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.

சென்னையில் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பங்கள் பெற சென்னை மாவட்டம் கூடுதல் பதிவாளர் , சென்னை மண்டல அலுவலகம், எண்,91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை 600018 என்னும் முகவரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறலாம்.

விண்ணப்ப பதிவு கட்டணமாக ரேசன் கடையில் சேல்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 150 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பேக்கர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 130 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட வேலை வாய்ப்பு மையம் (சென்னை)
ஆபிஸ் ஆப் தி அடிஸனல் ரெஜிஸ்ரேட்டர் ஆப் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டிஸ்
91, செயிண்ட் மேரிஸ் ரோடு,
அவிராமபுரம்.
சென்னை - 600018

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை முறையாக எந்த வித பிழையும் இன்றி பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு

சென்னையில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job Opportunity Of Chennai Ration shop Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia