யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

பொதுத்துறை நிறுவனமான யூனெடெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இப்பதவிகளுக்கு விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் .

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற ஆனலைனில் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழகத்தை சேர்ந்த 131 இடங்களுக்கு   இன்சூரன்ஸ் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . மொத்தம் 696 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . இன்சூரன்ஸ் பணிக்கான சம்பளம் 14,435 முதல் 32,030 வரை பெறலாம் . வயது வரம்பு 30.6.2017ன் படி 18முதல் 28க்குள் இருக்க வேண்டும் . இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .உள்ளூர் மொழியில் எழுத படிக்க வேண்டும் .

தேர்வுமுறைகள் இருகட்ட ஆன்லைன் தேர்வுமுறைகள் பின் நேர்முகத்தேர்வு வைத்து தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கபடுவார்கள் . பொதுதுறை நிறுவனமான இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்கள் விண்ணப்பிக்க ரூபாய் 600 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும் . தேவையான தகவல்களை பெற https://uiic.co.in/home  இணையத்தில் விண்ணப்பிக்கலாம் .

தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடங்கள் சென்னை, கோவை, தஞ்சை, திண்டுக்கல், திருநெல் வேலி, திருச்சி , சேலம், பெரம்பளூர், நாகர்கோவில் , கன்னியாகுமரி, மதுரை போன்ற இடங்களில் தேர்வு எழுதலாம் . ஆகஸ்ட் 28 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியாகும் . மேலும் தேர்வு செப்டம்பர் 22லிலும் , ஆக்டோபர் 23 லிலும் தேர்வு நடைபெறும் .

இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுடையோர் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் 

சார்ந்த பதிவுகள்:

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

ஐபிபிஎஸ் வங்கியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தொடங்கலாம்

மத்திய உளவுத்துறையின்கீழ் பணியாற்ற அறிவுப்பு வெளியீடு

English summary
here article tell about united Insurance recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia