பி.இ. படித்தவர்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு பணியிடங்கள்...!

மத்திய அரசு சார்பில் செயல்படும் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) என்பது இந்திய பொதுத்துறை பொறியியல் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உரிமம் வழங்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. இது 1965-ம் ஆண்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இரும்பு அல்லாத உலோகம், உள்கட்டமைப்பு, நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் உரங்கள் போன்ற ஒருங்கிணைந்த துறைகளிலும் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இஐஎல் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸில் அமைந்துள்ளது. மேலும் இஐஎல் நிறுவனமானது குர்கானில் ஆர் அன்ட் டி வளாகம் (ஆராய்ச்சிப்பிரிவு), மும்பையில் ஒரு கிளை அலுவலகம், கொல்கத்தா, சென்னை, வதோதராவில் பிராந்திய அலுவலகங்களை அமைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் முக்கிய உபகரணங்கள் உற்பத்தி மையத்தை நிறுவனம் அமைத்துள்ளது.

 பி.இ. படித்தவர்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு பணியிடங்கள்...!

லும், லண்டன் (இங்கிலாந்து), மிலன் (இத்தாலி), ஷாங்காய் (சீனா), அபுதாபி (யுஏஇ) நகரங்களிலும் அலுவலகங்களை இஐஎல் அமைத்துள்ளது.

இஐஎல் நிறுவனத்தில் 2400 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2014-ல் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது.
பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், கெமிக்கல்ஸ் & உரங்கள் கச்சா, பெட்ரோலிய பொருட்கள் & எரிவாயு குழாய்கள், கடல் மற்றும் கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு டெர்மினல்கள் சேமிப்பு, நிலத்தடி கச்சா எண்ணெய் சேமிப்புகள் சுரங்கம் & உலோகம் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, உயிரி சுத்திகரிப்பு, எரிவாயு செயலாக்க நிலையம், அணு சக்தி ஆகிய துறைகளில் தனது சேவையை நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில்தான் சிவில் பிரிவில் 4, மெக்கானிக்கல் பிரிவில் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் 9, பைப்பிங் பிரிவில் 4 என மொத்தம் 17 பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக். பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

31.10.2023-ம் தேதி அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் உண்டு.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் அந்தப் பணியிடங்களில் அனுபவமும் தேவைப்படுகிறது. இது தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதிக்குள் (நவம்பர் 22) விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பவேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு recruitment.eil.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு விண்ணப்பதாரர்கள் அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Engineers India Limited published the latest notification on its official website for the recruitment of Engineers in the Civil and Mechanical disciplines to fill up 17 job openings. Individuals having BE/B.Tech in the relevant discipline with 1-year post-qualification experience in the related field may apply for this job opportunity to seek a bright career.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+