வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !!

Posted By:

தமிழ்நாடு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ள குரூப் ஒன் வனத்துறை பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . குரூப் ஒன் சர்வீஸ் 1A பணிக்கு விண்ணப்பிக்க போட்டி தேர்வு எழுதுவோர்   விண்ணப்பிக்கலாம் . வனத்துறை சார்பாக குரூப் ஒன் ஏ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒன் டைம் பதிவுசெய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . குரூப் 1 ஏ வனத்துறைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலம் . அக்டோபர் 10 இறுதி தேதியாகும் . தேர்வு நடக்கும் தேதி டிசம்பர் 17 ஆகும்.

குரூப் ஒன் ஏ அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

கல்வித்தகுதி :

குரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் வனத்துறை என்பதால் அறிவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . குரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை வனத்துறை, சுற்றுசூழலியல் மற்றும் வேதியியல் , இயற்பியல் போன்ற அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மொத்தம் 14 பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் கடினபோட்டி இருக்கும் .

குரூப் ஒன் ஏ தேர்வில் முதண்மை, முக்கிய தேர்வு, நேர்முகதேர்வு மூன்று நிலைகள் உள்ளன. குரூப் ஒன் தேர்வுக்கு விண்ணப்பிப்போர்கள் தங்கள் முதண்மை தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது , தேர்வு மையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத முடியும்

குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் . வனத்துறை பணிக்கு விண்ணப்பிப்போர் வயது 21 முதல் 30 வரை மட்டுமே இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ , வங்கி மூலமாகவோ செலுத்தலாம் . மேலும் தேவையான தகவல்களை பெற அணுக வேண்டிய இணையதள முகவரியில் பெறலாம் .

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!!  

இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு !!! 

செபியில் ஆஃபிஸர் கிரேடு பணி வாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about tnpsc notification
Please Wait while comments are loading...