தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

தமிழ்நாடு விவசாயப் பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயப் பல்கலைகழகத்தின் நிரப்பபடவுள்ள பணியிடங்களின் எண்ணிகையானது 129 ஆகும்.

வேளாண்மை பல்கலைகழகத்தில்  தட்டச்சு, இளநிலை உதவியாளர் பணி வாய்ப்பு

தமிழ்நாடு விவசாயப் பல்கலைகழகத்தில் தட்டச்சர், இளநிலை பணியாளர் , தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

கல்வி தகுதி :

விவசாயப் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க பிளஸ் 2வில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்ச்சி குறைந்தபட்சம் தட்டச்சு பணியில் பல்கலைகழகத்தில் ஐந்தாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் எதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
தமிழ் ஆங்கிலம் எதேனும் ஒன்றில் லோயர் கிரேடு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிஸி, எம்பிஸி, எஸ்சி, எஸ்டி போன்ற பிரிவினர்களுக்கு விதிமுறைகளின் படி அந்தந்த பிரிவினர்கேற்ப வயது வரம்பு தளர்வு உண்டு.

கட்டணம் :

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 750 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்க்கு ரூபாய் 500 செலுத்தினால் போதுமானது ஆகும். தி கம்ட்ரோலர் ஆஃப் டிஎன்ஏயு என்ற பெயரில் பாரத் ஸ்டேட் வங்கியில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம்.

தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க அதிகாபூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அவற்றுடன் தேவையான இணைக்க வேண்டிய சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும் . அதிகாரபூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

தி ரிஜிஸ்ட்டர் ,

தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிட்டி,

கோயமுத்தூர் 641007

என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரிஜிஸ்ட்டர் போஸ்ட் அல்லது தனியார் கூரியர் சர்வீஸிலும் அனுப்பலாம்.

விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படும் முறையானது எழுத்து தேர்வு, தட்டச்சு, கணினி தேர்வு, மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 31 ஆகும்

சார்ந்த பதிவுகள்: 

விழுப்புரத்தில் அக்டோபர் 28ல் வேலை வாய்ப்பு முகாம் !!

தேசிய ஆசிரியர் வாரியத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க !! 

 தலைநகரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்!! 

English summary
here article tell about job recruitment of TNAU

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia