மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 5,8, 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Posted By:

மத்திய அரசின் பொதுதுறை நிறுவனமான டெலிகம்யூனிகேசன் கன்சல்டண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் டெலிகம்யூனிகேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இப்பணிகளுக்கான பணியிடன் குவைத் ஆகும் .

பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும்

தகுதியும் பணி அனுபவமும் உள்ளவரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை கம்பெனியில் நிரப்பபடும் மொத்த பனியிடங்களின் எண்ணிக்கையானது 110 ஆகும் . மேசன் பணிக்கு தேவையான ஆட்கள் 9 மற்றும் கார்பெண்டர்கள் பணிக்கு மொத்தம் 02 ஆகும். இப்பணிக்கு மாத சம்பளமாக 110 குவைத் தினார் வழங்கப்படுகிறது.

லேபர் அன்ஸ்கில்லுடு பணிக்கு மொத்தம் 82 பேர் தேவைப்படுகின்றனர் மேலும் இதற்கான சம்பளம் மொத்தம் 80 குவைத் திணார் ஆகும் . டிரைவர் பணிக்கு 17 பணியாளர்கள் தேவையுள்ளது. டிரைவர் பணிக்கு மாதம் 130 குவைத் தினார் பெறலாம் .

குவைத்தில் பணிபுரிய 5 , 8, மற்றும் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது ஆகும் . மேலும் சமபந்தப்பட்ட துறைகளில் அனுபவம் இருக்க வேண்டும் . இப்பணிகளுக்கு விண்ணப்பிபவர்கள் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

தி எக்ஸிகியூட்டிவ் டைரகடர்,
டெலி கம்யூனிகேஷன் கன்சல்டண்ட லிமிடெடு இந்தியா,
டிசிஐஎல் பவன்
கிரேட்டர் கைலாஸ் -1
நியூ டெல்லி 110048

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும் . மேலும் இங்கு அதிகாரபூர்வ இணையதளத்தை இணைத்துள்ளோம் . விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்துள்ளிர்களா மேற்கு இரயில்வேயில் வேலை !!! 

தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு !!!!

English summary
here article tell about job notification of TCIl

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia