இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !!

Posted By:

இந்தியன் ஸ்பேஷ் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்திய ரிசர்ஸ் செண்டர்களுள் ஒன்றான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இஸ்ரோ அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க அக்டோபர் 25 இறுதி தேதி ஆகும்

இஸ்ரோவின் ஆராய்ச்சி நிறுவனமான மகேந்திரகிரிமலை பகுதியில் புரொபெல்சன் காம்பளக்ஸ் உள்ளது . இங்கு பணியாற்ற டெக்னிக் அஸிஸ்டெண்ட் மற்றும் சயிண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பபடுகின்றன .

மொத்த காலியிடங்ள்:

டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பிரிவில் மெக்கானிக்கல் 8 பணியிடங்கள் அத்துடன் எலக்ட்டிரானிக்கல் 3 பிரிவுகள் சிவில் பிரிவில் 1 இடம் காலியாகவுள்ளன இவ்விடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

சயிண்டஃபிக் அஸிஸ்டெண்ட் பிரிவில் வேதியியல் ஒன்று அத்துடன் டெக்னிசியன் பி பிட்டரில் 7 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது . டர்னரில் ஒன்று, எலக்ட்ரிசியனில் ஒன்று , டெக்னிசியன் ஏசி ஒன்று அத்துடன் வெல்டர் பணியில் 3 மேலும் பயர்மேன் ,டிரைவர் , கேட்டரிங் அஸிஸெண்ட் பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரோவின் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு பிஇ டிப்ளமோவுடன் முடித்திருக்க வேண்டும் . டெக்னிசியன் பி பிரிவுகளில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்த ஐடிஐ பிரிவு படித்திருக்க வேண்டும் .

விதிமுறைகளின்படி சம்பளம் கொடுக்கப்படும் . மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ தளத்தை இங்கு இணைத்துள்ளோம் . இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதி தேதியாகும் . தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

வேலைவாய்ப்பு என்பது ஒரு வருமானத்திற்கான வழிமுறைகளை பெறும் அறிவிப்பு அந்த தகவலை நாம் அறிவதுடன் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம் ஆர்வமுள்ளோர்க்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் . இஸ்ரோவின் இந்த வாய்ப்பை தேவைப்படுவோர்க்கு கொண்டு சேர்க்கவும் சிறுதுளி உதவியேனும் செய்து பெருமிதம் கொள்வோம் .

சார்ந்த பதிவுகள்:

இர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்  

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்  

தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job notification of ISRO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia