இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு பெறவேண்டுமா விண்ணப்பிக்கவும்

Posted By:

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதி , இந்திய இராணுவத்தில் வேலை பெற அக்டோபர் 10க்குள விண்ணப்பிக்க வேண்டும் . இந்திய இராணுவத்திற்கு சிவிலியன்ஸ், ஃபையர் மேன், மற்றும் பல காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன .

இந்தியன் ஆர்மி வழங்கும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு

அறிவிக்கப்பட்டுள்ள இராணுவ காலிப்பணியிடங்கள் மொத்தம் 102 ஆகும் . இந்தியன் ஆர்மி மூன்று படைகளை கொண்ட சிறப்புமிக்க ஒன்றாகும் . 1895 முதல் விரிவுப்படுத்தப்பட்ட பாதுகாப்புத்துறை செயல்பட்டுவருகின்றது . இந்திய ஆர்மியின் பணியிடங்களின் பெயர் சிவிலியன்ஸ் பணியாகும்.

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தேவையான தகவல்களை பெற அதிகாரபூர்வ இணைய தளத்தில் பெறலாம். வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் . மேலும் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது எழுத்து, உடற் தகுதி, பயிற்சி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆவர் .

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற அஞ்சல்மூலமாகவோ, அல்லது பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் பாதுகாப்புத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ரூபாய் 18,000 முதல் ரூபாய் 21,000 ஆயிரம் வரை சம்பள தொகை பெறலாம் . பாதுகாப்புத்துறையில் பணியாற்ற  அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புக்கான அறிவிக்கையின் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது . தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் முறைப்படி இணைத்து  புகைப்படங்களுக்கு சுயஉறுதி செய்து அனுப்பி வைக்க வேண்டும் .  சரியான தகவல்களை முறைப்படி  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

வேலைவாய்ப்பு வாங்க விருப்பமும் தகுதியிருந்தால் விண்ணப்பிக்கவும் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்

English summary
here article tell about army job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia