ஹெச்பி பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் 2018இல் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பினை வேலை வாய்ப்பு தேடுவோர் பயன்படுத்தலாம்.

வேலை வாய்ப்புக்கு  விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து பணியினை பெறலாம்

மத்திய அரசின் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவன பணியிட விவரங்கள்:
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
எலக்டிரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ரூமெண்ட் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டார்ஜிக்கல் இன்ஜினியரிங்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பணிக்கு விண்ணப்பிக்க 25 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
ஒபிசி பிரிவினர்க்கு 3 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது .
மாற்று திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது .
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 15 வருட தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. .
ஒபிசி பிரிவு மாற்றுதிறனாளிக்கு 13 வருடம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 275 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்க்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கல்வித் தகுதி:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெடு ஆபிசர் இன்ஜினியர் 2018 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் அறிந்து கொள்வோம்.

கெமிக்கல் இன்ஜினியரிங் பணிக்கு பெட்ரோ கெமிக்கல்ஸ்/ பாலிமர்/ பிளாஸ்டிக் இன்ஜினியரிங் எக்ஸ்குளிடிங் ரப்பர்/ ஆயில்/ பெயிண்ட் டெக்னாலஜி/ கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புக்களை அங்கிகரிகப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

சிவில் இன்ஜினியரிங் பணிக்கு - கன்ஸ்ட்ரக்ஸன் /என்வைரன்மெண்டல்/ டிரான்ஸ்போர்டேசன் போன்ற படிப்புக்களை படித்திருக்க வேண்டும்.

கம்பியூட்டர் சையின்ஸ் & இன்பார்மேசன் டெக்னாலஜி பணிக்கு இன்பார்மேசன் மற்றும் கம்யூனிகேசன் டெக்னாலஜி பிரிவினை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பணிக்கு எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் /
எலக்டிரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன்ஸ் இன்ஜினியரிங் / எலக்டிரானிக்கல்& எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

எலக்டிரானிக்ஸ் & கம்யூனிகேசன்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்டேசன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவை சேர்ந்த படிப்பை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர்க்கு ரூபாய் 24900 முதல் 50500 மாதச் சம்பளம் பெறலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற
எழுத்து தேர்வு,
பர்சனல் இண்டர்வியூ
டாக்குமெண்டேசன் வெரிபிகேசன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணைய லிங்கினை இங்கு இணைத்துள்ளோம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுவதுமாக படித்து விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படித்து தவறின்றி பூர்த்தி செய்ய வேண்டும்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெடு அதிகார அறிவிப்பு லிங்க் இணைத்துள்ளோம்.
ஹிந்துஸ்தான் விண்ணப்ப லிங்கினை இணைதிருக்கின்றோம்.

சார்ந்த பதிவுகள்:

பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை 

செயில் ஸ்டீல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

English summary
Here article tells about Job notification Of HP petroleum

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia