மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சுகாதார மையமான புனே மற்றும் மும்பை,அகமதாபாத் , நாக்பூர் உள்ளிட்ட பணியிடங்களில் மத்திய அரசின் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புக்கு காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசின் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புக்கு நர்சிங், மருந்தாளுநர் போன்ற அதிகாரிகள் மற்றும் ஆய்வக டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 104 ஆகும்.
மத்திய சுகாதாரத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் :
பார்மாஸிஸ்ட் அலோபதி 39 பணியிடங்கள்
பார்மாஸிஸ்ட் கம் கிளார்க் ஹோமியோபதி 9 பணியிடங்கள்
பார்மாஸிஸ்ட் ஆயுர்வேதா 7 பணியிடங்கள்
நர்சிங் ஆஃபிஸர் குரூப் 1 மொத்தம் 13 பணியிடங்கள்
லெபாரட்டரி டெக்னிசியன் பணியிடங்கள் 9
லெபாரட்டரி அஸிஸ்டெண்ட் 5 பணியிடங்கள்
ஏஎன்எம் பணியிடங்கள் 9 பணியிடங்கள்
டெண்டல் டெக்னீசியன் 1 பணியிடங்கள்
லேடி ஹெல்த் விசிட்டர் 13 பணியிடங்கள்
இசிஜி டெக்னீசியன் 2 பணியிடங்கள்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 4 ஆகும். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இதுகுறித்து தேவைப்படும் தகவல்கள் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய இனைப்பை இங்கு கொடுத்துள்ளோம். மேலும் வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கை இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம். தகுதிகேற்ப சம்பளத் தொகை விதிமுறைப்படி பெறலாம். அத்துடன் கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு குறித்து அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உடையோர் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












