பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்

Posted By:

ஜெய்ஜவான் மற்றும் ஜெய் கிஷான் என்ற மந்திரத்தின் அர்த்தம் என்னவெனில் வெற்றி நாட்டைக்காக்கும் வீரர்களுக்கு வெற்றி நாட்டை ஆரோக்கியம் ஆக்கும் விவசாயிகளுக்கு வெற்றி என்ற அர்த்தம் கொண்டது . இத்தகைய பெருமை கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு செயவது என்பது எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு  விண்ணப்பிக்கவும்

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெறுவது கௌரவமிக்க பணியாகும். இந்திய எல்லைப்படையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய எல்லைப்படையில் கான்ஸ்டபிள் பணி மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பெண்களுக்கான பணியிடம் அமைக்கும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய இராணுவ பிஎஸ்எஃப் பணியில் 196 பணியிடங்களுக்கான காலியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதில் பெணகளுக்கு 61 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது . பிஎஸ்எஃப் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 21700 தொகை வழங்கப்படும் .

இந்திய இராணுவப்படைகளில் ஒன்றான பிஎஸ்எஃப் பணியில் வேலை செய்ய பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . பத்தாம் வகுப்புக்கு படித்திருந்து விளையாட்டில் போதுமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .

தேவையான தகுதிகளை பெற்றுள்ளவர்கள் தக்க சான்றிதழ் நகழுடன் புகைப்படத்தை இணைத்து சுய கையெப்பமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

தி கமெண்டெண்ட்,
32, பிஎன் பிஎஸ்எஃப்,
ஹிசார் மாவட்டம் ,
போஸ்ட் ஆஃப்ஸ் சிர்ஸா ரோடு ,
125011

முப்பது நாட்களுக்குள் பிஎஸ்எஃப் அலுவலகத்தை அடைய வேண்டும் . பிஎஸ்எஃப் பணியிடங்களில் பணி செய்ய தேர்ந்தெடுப்பது உடல்தகுதி, மருத்துவ தகுதி, டிரேடு டெஸ்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . பிஎஸ்எஃப் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளம் இணைத்துள்ளோம் . அதிகாரபூர்வ அறிவிக்கைத்தளம் அளித்துள்ளோம் அத்துடன் விண்ணப்ப இணைப்பும் இணைத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க  

தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job notification of BSF

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia