இந்தியன் ஆர்மியில் 10 ,12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் பிரிவில் வேலை !!

Posted By:

இந்தியன் ஆர்மியில் டெக்னிக்கல் பிரிவில்  திருமணம் ஆகாத ஆண்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆர்மியில் டெக்னிக்கல் எண்ட்ரி ஸ்கிமில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 29நாள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும்.

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் பனிரெண்டாம் வகுப்பு முடித்தால் போதும்

இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க அறிவிக்கையை தெளிவாக
படித்தப்பின்பு விண்ணப்பிக்க வேண்டும். இந்தியன் ஆர்மியில் பணியாற்ற விண்ணப்பிப்போர் சரியாக விண்ணப்பிக்க வேண்டும் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.

இந்தியன் ஆர்மியில் 10 மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு டெக்னிக்கல் எண்ட்ரி பணியிடங்கள் மொத்தம் 90காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் பணியும் அளிக்கப்படும்.
டெக்னிக்கல் பணியில் இணைய 16 ½ வயது முதல் 191/2 வயது வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணபிப்போர் 1999 முதல் மற்றும் 2002 க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதியாக 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகள் அதிகாரப்பூர்வ கல்விநிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.

ராணுவத்தின் டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பிக்க மெரிட் லிஸ்ட், எஸ்எஸ்பி இண்டர்வியூ, மெடிக்கல் டெஸ்ட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முழுமையான தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற ஜாயிண்ட் இண்டியன் ஆர்மி இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளவும். ஆன்லைனின் விண்ணப்பிக்க இணைப்பு இணைத்துள்ளோம். அதிகாரபர்வ வேலைக்கான அறிவிக்கை இணைப்பும் இங்கு கொடுத்துள்ளோம். வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போர் நவம்பர் 29ஆம் நாள் காலை 10மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . இவ்வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறலாம். வாய்ப்புகள் கிடைத்த கொண்டே இருக்கும் தேடுபவர்களுக்கு  என்றும் கிடைக்கும் என்ற வரிகளை நினைவில் வைத்து முயற்சியுங்கள் வெற்றி கிடைக்கும். 

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய இராணுவ மருத்துவமனையில் வேலை 

இந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் !! 

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of Indian army technical field

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia