தேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க !!

Posted By:

தேசிய திட்டங்கள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . தேசியதிட்டங்கள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 79 ஆகும்.

தேசிய திட்டங்கள் துறையில் மேலாளர், மூத்த மேலாளர் பணிக்கான விண்ணப்பம்

தேசிய திட்டங்களின் கார்ப்பரேஷனுக்கு தேவையான பணியிடங்கள்:

சீனியர் மேனேஜர் 20 பேர்கள்
மேனேஜர் 15 பேர்
ஜென்ரல் மேனெஜர் பணிக்கு (சிவில்)  15
ஜாயிண்ட் ஜென்ரல் மேனெஜர் (சிவில்)  10
ஜென்ரல் மேனேஜெர் (சிவில்) 5
மேனெஜர் (ஹெச்ஆர்) -5
மேனெஜர் (ஐடி) 4
குரூப் ஜென்ரல் மேனெஜர் (சிவில்) 3
ஜென்ரல் மேனெஜர் (ஹெச் ஆர் )1
ஜாயிண்ட் மேனெஜர் (ஹெச் ஆர் )1

விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . தேசிய திட்டங்கள் கார்பரேஷனில் வேலை செய்ய இன்ஜினியரிங் கணினி அறிவியல், சிவில், ஐடி படிப்பில் இளங்கலை , முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .

தேசிய திட்டங்கள் கார்பரேஷனில் பணியாற்றும் மூத்த மேலாளர்களுக்கு ரூபாய் 24,900 முதல் 30,000 வரை சம்பளம் வழங்கப்படும் . மேலாளர்களுக்கு ரூபாய் 20,600 முதல் 46, 500 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியில் பணியாற்ற வயதுவரம்பானது 30, 35, 40, 45,48, 50, 52க்குள் இருக்க வேண்டும்.

தேசியதிட்டங்கள் துறையில் பணியாற்ற பொது பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூபாய் 800 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான பணியிடம் புதுடெல்லியாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பும் முகவரி:

குரூப் ஜென்ரல் மேனெஜர் (ஹெச்ஆர்) , என்பிசிசி லிமிடெட்
கார்பரேஷன் ஆபிஸ் பிளாட் நெம்பர் செக்டர்- 44,
குர்கிராம் -122003

தேசிய திட்டங்கள் துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் , அறிந்து கொள்ள http://npcc.gov.in/Home.aspx அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது 

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!! 

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க !!

English summary
here article tell about notification of national project construction corporation

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia