ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க !!

Posted By:

தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் . பணியிடங்களுக்கான அறிவிப்பு சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோட்டில் பணியிடங்களுக்கான தேவையுள்ளது .

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆவின் பால் கழகத்தில் வேலைவாய்ப்பை காலியாகவுள்ள இடங்கள் மேனெஜெர் (மார்கெட்டிங்) , துணை மேனெஜெர், துணை மேனெஜெர் (டெய்ரி ) ,துணை மேனெஜெர் ( டெய்ரி பேக்டிரியாலஜி ) சூப்பிரவைசர் டிராஃபிக் . எக்ஸ்கியூட்டிவ் (லேப்) எக்ஸிகியூட்டிவ் சிவில் , பிரைவேட் செக்ரட்ரி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவித்துள்ளது .

ஆவினில் பணியாற்ற சம்பள தொகையாக ரூபாய் 9, 300 முதம் 38,400 வரை மேனெஜெர் பணிகளுக்கு அளிக்கப்படுகிறது . மற்ற பணிகளுக்கு ரூபாய் 5200 முதல் 20,200 அளிக்கப்படுகிறது . மொத்தம் நிரப்படவுள்ள பணியிடங்கள் 17 ஆகும் . ஆவினில் பணிபுரிய 30 வயதுக்குள் வயது வரம்பு இருக்க வேண்டும் . பிசி, எம்பிசி, டிசி , எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்வு இல்லை . ஆவினில் பணிபுரிய பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும் மேலும் அந்தந்த பதவிகளுக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும். 18 வயதிலிருந்து 30 வயதுகுக்குள் இருக்க வேண்டும் .

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ரூபாய் 250 விண்ணப்ப தொகை செலுத்த வேண்டும் . விண்ணப்ப தொகையினை பொதுதுறை வங்கியில் தி மேனேஜிங் டைரக்டர் ,TCMPF Ltd., chennai -51 டிடி எடுத்து அனுப்ப வேண்டும் . ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வில் வெற்றி பெற வேண்டும் . விண்ணப்பிப்பதற்கான அனைத்து விவரங்களையும் சரியாக முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிப்போர் இரு நகல்களாக பிரித்து விண்ணப்பத்தாரர் தன் வசம் ஒன்று வைத்து அலுவலகத்திற்கு ஒன்று அனுப்ப வேண்டும் . 

ஆவின் நிறுவனத்திற்கு நேரடியாக விண்ணப்பங்களை அனுப்ப தி மேனேஜிங் டைரகடர், டிசிஎம்பிஎஃப் லிமிடெட் சென்னை , 51 முகவரிக்கு அனுப்ப வேண்டும். விருப்பமுடயோர் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய இராணுவத்தில் பணியாற்ற அறிவிப்பு 

எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification from aavin milk Industry

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia