ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

Posted By:

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . 24 டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு தகுதியானவர்கள் அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டெக்னீசியன் பணியிடங்கள் மொத்தம் காலியிடங்கள் 3 ஆகும் . மாத சம்பளமாக ரூபாய் 5200 முதல் 20200 வரை பெறலாம் . தரஊதியமாக ரூபாய் 2400 பெறலாம் . ஆவின் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் .

சீனியர் டெக்னீசியன் பணிக்கு மொத்த நிரப்பவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கையானது 19 ஆகும் மேலும் இப்பணிக்கு ரூபாய் 4800 முதல் ரூபாய் 10000 வரை சமளம் பெறலாம் .  சீனியர் டெக்னீசியன்பணிக்கு கல்வித்தகுதியாக பிளஸ் 2 வகுப்பில்  தேர்ச்சியுடன் எதாவது ஒரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது  1.7.2017ன் பொழுது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓபிசி, பிசி பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவினர் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து ஜெனரல் மேனேஜெர் , கேடிசி எம் பி யூ என்ற நிறுவனத்திற்கு டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

ஆவின் மில்க் என்னும் தளத்தில் நேரடியாக விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து சுயகையெப்பத்துடன் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31 ஆகும். விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய முகவரியானது  காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டம் கூட்டுறவு பால்பண்ணை குருவப்பா தெரு, அயனாவரம் சென்னை 600023 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபர் 31க்குள் சென்றடைய செய்ய வேண்டும் . விண்ணப்ப இணைப்பும் அத்துடன் அதன் முழுவிவரங்கள் அறிந்துகொள்ள இணைய இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம் . இதனை நன்றாக படித்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக இணைக்க வேண்டும் .

அரியதொரு வாய்ப்பான ஆவின் பணிவாய்ப்பினை நன்றாக வேலைதேடுவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் பொதுதுறை நிறுவமன மஜாகன் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !!  

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification aavin

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia