தமிழக அரசு சார்பில் திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்!

Posted By: Kani

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (29 ஆம் தேதி) ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு,மாவட்ட தொழில் மையத்தின் கடனுதவி திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் பதிவு, மாதிரி வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் 75-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.

தமிழக அரசு சார்பில் திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்!

கல்விதகுதி: 8 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலைவாய்பு முகாமில் பங்கேற்கலாம்.

தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

 

English summary
Job fair Thiruvallur tomorrow

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia