விழுப்புரத்தில் அக்டோபர் 28ல் வேலை வாய்ப்பு முகாம் !!

Posted By:

விழுப்புரத்தில் வருகிற அக்டோப்ர் 28 ஆம் நாள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது . வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள் உங்களுக்கு இது அரிய வாய்ப்பாகும் . விழுப்புரத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று உங்களுக்கான வேலையை உறுதி செய்து கொள்ளவும்.

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

விழுப்பரத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழுப்புர மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் விழுப்புரத்தில் தனியார் கம்பெனிகளை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கின்றது .

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் . வேலைவாய்ப்பு முகாமில் 100கணக்கான தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம் , பட்டய படிப்பு படித்தவர்கள் மேலும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலை வய்ப்பு பெறலாம் .

வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு கொண்ட வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்களுடன் , தேவையான சான்றிதழ்கள் ஆதார் சான்று நகல்களை உடன் இணைத்து பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களை பெற விழுப்புர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எண்ணை 04146- 226417 தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம் . விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்பட்டவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்த மாவட்ட ஆட்சியாளர் இல.சுப்புரமணியன் அறிவித்துள்ளார்.

சார்ந்த பதிவுகள்:

எட்டாவது பாஸா உங்களுக்கு இந்திய உணவு கழகத்தில் வேலை ரெடி !! 

இந்திய நேவியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க!!

English summary
here article tell about job fair of Tamil nadu
Please Wait while comments are loading...