புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் அதிகாரி பணி!

Posted By: Kani

புதுச்சேரியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜிப்மர் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள நர்சிங் ஆபீசர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் (குரூப்-சி) போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 115

பணி: நர்சிங் ஆபீசர்-91

வயது வரம்பு: நர்சிங் ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18-5-2018 இதழில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைப்ரி பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்-24

வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.  

தேர்வு முறை: கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 செலுத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.5.2018 

இதுகுறித்து மேலும் விரிவான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.  

English summary
JIPMER invite application for Nursing Officer and LDC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia