CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!

CRPF உதவி சப் இன்ஸ்பெக்டர் பணி அறிவிப்பு 2023

ஜனவரி 25 ஆம் தேதி வரை சி.ஆர்.பி.எப்.,ன் அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in இல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 1,458 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்களில், உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) 143 காலியிடங்கள் பதவிக்கும், 1,315 காலியிடங்கள் தலைமை காவலர் பதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் 48 மணி நேரம் தான் இருக்கு என்பதை மறக்காதீங்க....! ஆன்லைன் முறை என்பதால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் எளிது தான்.

நிர்வாகம் : மத்திய ரிசரவ் போலீஸ் படை(Central Reserve Police Force)

மேலாண்மை : மத்திய அரசு

ரூ.91 ஆயிரம் ஊதியத்தில் சி.ஆர்.பி.எப்.,இல் பணி..!

பணி விவரம்

Ø உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ)

Ø தலைமை காவலர் பதவிகள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1,458

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2023( நாளை கடைசி)

கல்வி தகுதி

உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இடைநிலை (12 ஆம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

Assistant Sub Inspector பணிக்கு நிலை-5 படி மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- ஊதியம் வழங்கப்படும்.

Head Constable (Ministerial) பணிக்கு நிலை-4 படி மாதம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.01.2023.. மறக்காதீங்க.... மறக்காதீங்க

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஜனவரி 25, 2023 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

கணினி வழி தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெற உள்ளது. 'அட்மிட் கார்டு' பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு முறை

கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, பிஎஸ்டி, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதள த்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள்/ESM விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

CRPF இன் அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in-யை பார்வையிடவும்.

ஆட்சேர்ப்பு அல்லது வேலைவாய்ப்பு என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இப்போது புதிய பக்கம் திறக்கும்.

முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் CRPF ஆள்சேர்ப்பு ASI, ஹெட் கான்ஸ்டபிள் இணைப்பை அழுத்தவும்.

பதிவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

இதையடுத்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://crpf.gov.in/recruitment-details.htm?246/AdvertiseDetail

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_246_1_622122022.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Jobs Notification 2023: Central Reserve Police Force (CRPF) under the Ministry of Home Affairs has released a recruitment notification for the posts of Assistant Sub Inspector (Steno) and Head Constable. Online applications are invited from the youth till 25th January. Hi youths don't forget....tomorrow is the last
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X