அஞ்சல் துறையில் முகவர் பணி 2023
சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர்கள் பணிக்கான நேர்காணல், ஜனவரி 23 நடக்கிறது. ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
சுய தொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சல் முகவர் தேர்வுக்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.

ஊதியம்
முகவர்களாக தேர்வாகும் நபர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில், அவர்களுக்கு ஊக்கத்தொகை, கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.
தகுதி என்ன?
ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதேபோல, இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
கல்வி தகுதி
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
முகவர் பணிக்கு 18 வயது முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளை கொண்டிருக்கும் ஆர்வமுள்ள நபர்கள் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
எங்கே நேர்காணல்...!
எண் 2, சிவஞானம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை 600017.
பாண்டி பஜார் அருகில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வளாகம்.
என்னென்ன ஆவணங்கள்
மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு),
அசல் மற்றும் இரண்டு நகல் வயது சான்று, முகவரி சான்று மற்றும் கல்வி சான்று ஆகியவை உடன் எடுத்து வர வேண்டும்.
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.
மறக்காதீங்க...!
ஜனவரி 23ல் காலை 10 மணி முதல் நேர்காணல் நடைபெறும்.