இஸ்ரோவில் வேலை: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

Posted By: Kani

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் பர்சனல் அசிஸ்டன்ட், சுருக்கெழுத்தாளர்

பணியிடங்கள்: 171

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ படித்து தட்டச்சில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 26 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.08.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
ISRO Recruit Graduates, Diploma Candidates For 171 Vacancies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia