இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலைவாய்ப்பு !!

Posted By:

இந்தியன் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்திய ரிசர்ச் செண்டரான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் .

அறிவியல் விஞ்ஞானியாக இஸ்ரோவில் ஒரு பணிவாய்ப்பு

இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விஞ்ஞானி மற்றும் கணினி அறிவியல் படித்தவர்கள், மெக்கானிக்கல், எலக்டிரானிக்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 80 ஆகும். இஸ்ரோ அறிவித்துள்ள பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 56100 தொகை சம்பளமாக பெறலாம் .

இஸ்ரோவில் பணியாற்ற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பொறியியல் மற்றும் பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . 65 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இஸ்ரோவில் பணியாற்ற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம ரூபாய் 100 பொது பிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினர்கள் செழுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களான எஸ்டி, எஸ்சி, மாற்றுதிறனாளிகள் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அறிவியல் விஞ்ஞானியாக விருப்பம் கொண்டு இஸ்ரோவில் இணைய 35 வயதுக்குள் இருக்க வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் பணியாற்ற எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் . இஸ்ரோவில் பணியாற்ற விண்ணப்பிக்க  அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

இஸ்ரோவில் பணியாற்ற  எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு விரைவில்  அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுலள்ளது . இந்திய அரசின் மிகசிறந்த பணிகளுள் இஸ்ரோவில் பணியாற்றுவதும் ஒரு சிறப்பாகும் . முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் இஸ்ரோவில் பணியாற்றி  நாட்டுக்கு அரும் பெரும் சாதனை புரிந்துள்ளார் . இத்தகைய சிறப்புகள் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி படிக்க வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்:

மின்துறையில் வேலைவாய்ப்பு பெறனுமா செப்டம்பர் 25க்குள் விண்ணப்பிங்க 

அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்க்கான வேலைவாய்ப்பு

English summary
here article tell about job notification of isro

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia