இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. டிசம்பர் 4ம் தேதியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 548 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Trade Apprentice மற்றும் Technician Apprentice
மொத்த காலிப் பணியிடங்கள் : 548
கல்வித் தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் ITI, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : அப்ரண்டிஸ் விதிமுறையின்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 04.12.2021ம் தேதிக்குள் (நாளை கடைசி நாள்) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iocl.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.