இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் ஏராளமான அப்ரென்டிஸ் பணியிட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்க https://iocl.com/apprenticeships என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும், இது 2020-21 நிதியாண்டில், ரூ. 7 21,762 கோடி (2.9961 பில்லியன் அமெரிக்க டாலர்) நிகர லாபத்தைக் கொண்டுள்ளது. 2020 பார்ச்சூன் 500 பட்டியலில் இந்தியாவில் 2-ம் இடத்திலும், உலகளவில் 151-ம் இடத்திலும் உள்ளது. 31 மார்ச் 2020 நிலவரப்படி, இந்தியன் ஆயிலின் ஊழியர்களின் எண்ணிக்கை 33,498 ஆகும், இதில் 17,704 நிர்வாகிகள் மற்றும் 15,794 நிர்வாகிகள் அல்லாதவர்கள் ஆவர்.
இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும், 2019-20 நிதி ஆண்டில் 5,66,950 கோடி வருமானத்தையும் 1,313 கோடி ருபாய் நிகர லாபத்தையும் கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை ஆகியவற்றை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கிறது.
இந்தியன் ஆயில் மாற்று எரிசக்தி மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது இலங்கை (லங்கா ஐ.ஓ.சி), மொரீஷியஸ் (இந்தியன் ஆயில் (மொரீஷியஸ்) லிமிடெட்) மற்றும் மத்திய கிழக்கு (ஐ.ஓ.சி மத்திய கிழக்கு எஃப்.இசட்இ) ஆகியவற்றில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, 2017-18 நிதி ஆண்டிலும் ₹21,346 கோடி நிகர லாபத்துடன், அதிக லாபம் ஈட்டும் அரசு நிறுவனமாக விளங்குகிறது. ஆயில் மற்றும் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், ₹19,945 கோடி நிகர லாபத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிப்ரவரி 2020ல், தினமும் 40,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க, ரோஸ்நெவ்ட் என்ற ரஷ்ய எண்ணெய் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டது. ஏப்ரல் 1, 2020-ல் தெலங்கானாவில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் பிஎஸ்-6 தர எரிபொருள் வினியோகத்திற்கு தயாரானது
உலகின் உயர்ந்த இடத்தில் உள்ள விற்பனை நிலையத்தை,(காசா - இமாசலப் பிரதேசம்) அமைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் ஏழு முக்கிய வணிக பிரிவுகள் உள்ளன.
தற்போது இந்த பெருமைமிகு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்தான் (IOCL) நாடு முழுவதும் மொத்தம் 1603 அப்ரென்டிஸ்(Apprentice) பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாடு & புதுச்சேரியில் மட்டும் 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்ரென்டிஸ்(Apprentice) கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10th, 12th, ITI, Diploma, B.A, B.Com, B.Sc, BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நவம்பர் 30, 2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தேர்ந்தெடுக்கும் செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் ஜனவரி 5 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஐஓசிஎல் அப்ரென்டிஸ் விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு
https://files.jobs7.in/jobs/1702293617-iocl-notification-for-1603-apprentice-posts.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்க https://iocl.com/apprenticeships என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












