மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் உளவுத்துறையில் பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு mha.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திறமையாக செயல்பட்டு வருகிறது ஐ.பி. என்று அழைக்கப்படும் உளவுத்துறையில் இன்டெலிஜென்ஸ் ஆபீஸர் பிரிவில்தான் பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்தத் துறையில் தான் தற்போது காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உளவறிதல், துப்பறிதல் போன்ற ஜேம்ஸ்பாண்ட் பாணி வேலைகள் தான் இதுவும்.
இந்திய உளவுத் துறை (ஐ.பி. - Intelligence Bureau -IB) என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவாக அமைந்துள்ளது. இந்த உளவு அமைப்பு மததிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் திறமையான முறையில் செயல்படுகிறது. இதன் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணியமர்த்தப்பட்டு வருகிறார். இதன் தற்போதைய இயக்குனராக ராஜீவ் ஜெயின் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த உளவு அமைப்பு, 1885-இல் மேஜர் ஜெனரல் சார்லஸ் மெக் கிரிகோர் தலைமையில் நிறுவப்பட்டது. அப்போது இதன் நோக்கம், ரஷ்யாவின் படைகள், பிரிட்டன் இந்திய அரசுக்கு எதிராக, ஆப்கானிஸ்தானில் குவிப்பதை கண்காணிப்பதையும், தடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. 1909-ல் லண்டனில் உள்ள இந்திய விடுதியில் தங்கிச் செயல்படும், இந்திய விடுதலைப் புரட்சியாளர்களை கண்காணிக்கவும் இந்த உளவு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 1921-ம் ஆண்டில் இந்த உளவு அமைப்பின் பெயர் இந்திய அரசியல் உளவு அமைப்பு (Indian Political Intelligence (IPI) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1947-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு, மத்திய உளவு அமைப்பு எனும் பெயரில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் திறமையான முறையில் செயல்படுகிற்து.
ஐ.பி. எனப்படும் இந்திய உள்வு அமைப்பு உள்நாட்டு உளவு வேலைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் உள்வு அதிகாரிகள், பல சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பெரும்பாலும் இந்தியக் காவல் பணி, இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இதன் ஊழியர்களாக உள்ளனர். எல்லைப் பகுதிகளில் உளவுத்துறைத் தொடர்பான பணிகளையும், தகவல்களையும் சேகரிப்பதில் ஐ.பி. பணிபுரிகிறது. இந்த பெருமை வாய்ந்த உளவுத்துறையில் தான் தற்போது அசிஸ்டென்ட் சென்ட்ரல் இன்டெலிஜென்ட் ஆபீஸர் பிரிவில் மொத்தம் 995 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
வயதுத்தகுதியாக 15.12.2023 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 550 செலுத்தி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 450-ஐ கட்டணமாக செலுத்தினாலே போதுமானது.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள் டிசம்பர் 15(15.12.2023) ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு mha.gov.in என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












