இளைஞர்களே...!அணுசக்தித் துறையில் அற்புதமான வேலை காத்திருக்கு...!!

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதிவாய்ந்த இளைஞர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு ipr.res.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

இந்திய அணுசக்தித் துறை (Department of Atomic Energy- DAE) என்று அழைக்கப்படும் அணுசக்தித் துறையானது நாட்டின் பிரதமரின் நேரடி மேற்பார்வையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தத் துறையானது அணுசக்தி மின்சாரம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களுக்கு பொறுப்பாக செயல்படுகிறது.

மேலும், இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு இத்துறையின் செயல்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அணுசக்தி ஆணைக்குழு, அணுசக்தி சட்டமுறையியல் வாரியம் ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.

இளைஞர்களே...!அணுசக்தித் துறையில் அற்புதமான வேலை காத்திருக்கு...!!

இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிறுவனம், அணுக்கரு அணுசக்தியை மின்சாரம் தயாரிப்பதற்கும், அதன் வழியாக மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.

இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் 1987ஆம் ஆண்டில் துவங்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் செயல்படுத்தும் அனைத்து அணு சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் ஐஎஸ்ஓ 14000 தரநிர்ணயம் கொண்ட நிறுவனங்களாகும்.

இந்த அணுசக்தி துறையின் கீழ்தான் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் (Institute for Plasma Research) செயல்படுகிறது. இயற்பியலில் ஆராய்ச்சிகளை தனித்து இயங்கி செயல்படுத்தும் ஒரு புகழ் பெற்ற இந்திய நிறுவனமாக இது உள்ளது. இந்நிறுவனம் பிளாஸ்மா சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை, அடிப்படை பிளாஸ்மா இயற்பியல் ஆய்வுகள், காந்தச் சிறைப் பிணைவு ஆய்வுகள், பிளாஸ்மா தொழில்நுட்பங்கள், ஆகிய பிரிவுகளில் தொழில் முறையில் மேம்படுத்த கவனம் செலுத்துகிறது. இது ஒரு பெரிய நிறுவனமாகவும், முன்னணி நிறுவனமாகவும் நாட்டில் அமைந்துள்ளது. இதற்கான பொருளாதார உதவி முக்கியமாக இந்திய அணுசக்தித் துறையால் வழங்கப்படுகிறது.

பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில், சபர்மதி ஆற்றின் அருகே உள்ள பட் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது அகமதாபாத், காந்திநகர் ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும், அகமதாபாத் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

இந்த பெருமை வாய்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் ஆபீஸர் இயற்பியல் பிரிவில் 6, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் பிரிவில் தலா 3, இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் தலா 4, கம்ப்யூட்டர் பிரிவில் 2 என மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் இயற்பியல் பிரிவுக்கு எம்.எஸ்சி., மற்ற பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் வயது 30-க்குள் இருக்க வேண்டும்

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விண்ணப்பங்களை டிசம்பர் 18-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் இளைஞர்கள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ipr.res.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறிய முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Institute of Plasma Research has invited applications for Technical Officer posts. Eligible candidates can apply online through the official website of IPR at ipr.res.in. This recruitment drive will fill up 22 posts in the organization.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+