இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர், தொழில்நுட்ப மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை (India Post)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- உதவி மேலாளர் - 23
- தொழில்நுட்ப மேற்பார்வையாளர் - 06
மொத்த காலிப் பணியிடங்கள் : 29
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Computer Science துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடத்திற்கு லெவல் - 7-யின் படி ரூ.9,300 முதல் ரூ.34,800 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 05.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வி இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












