இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பத்து மற்றும் பிளஸ்2 , டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

Posted By:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியீடு இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமா விண்ணப்ப அறிவிப்பை படியுங்க.
இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 98 ஆகும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் இந்தியாவில் தமிழ் நாடு, தெலுங்கானா, கேரளா, புதுசேரி, கர்னாடகா, போன்ற பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது ஜனவரி 20, 2018 முதல் வேலை வாய்ப்பினை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் கார்பரேசனில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 10.2.2018 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கையை முழுவதுமாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்களாவன
1 ஜூனியர் ஆப்ரேட்டர் குரூ. 1- 51
2 ஜூனியர் ஆப்ரேட்டர் ஏவியேசன் குரூப் I- 46
3 ஜூனியர் சார்ஜ்மேன் குரூப் III-01

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெடு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் :
ஜூனியர் ஆப்ரேட்டர் குரூப் I பணிக்கு விண்ணப்பிக்க
மெட்டிரிக்கில் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் ஐடிஐ பயிற்சி, எலக்டிரானிக்ஸ் மெக்கானிக் 2, இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் 3, எலக்ட்ரிசியன் 4, மெக்கானிஸ்ட் 5, பிட்டர் குறைந்த பட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் ஆப்ரேட்டர் ஏவியேசன் குரூப் I பணிக்கு விண்ணப்பிக்க
 உயர்நிலை வகுப்புகளான பனிரெண்டாம் வகுப்பு குறைந்த பட்சம் 45 % சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓபிசிபிரிவினர்  40 % எஸ்சிஎஸ்டி பிரிவில் ஹெவி வெய்கில் டிரைவிங் லைசென்ஸ் குறைந்த பட்சம் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும.

ஜூனியர் சார்ஜ்மேன் குரூப் III

3 வருட டிப்ளமோ மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேசன்/ சிவில் / எலக்ட்ரிக்கல் & எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற குறைந்த பட்சம் 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் 
ஒபிசி பிரிவினர் 3 வருடங்கள் 
மாற்றுதிறனாளிகள் 10 வருடங்கள்
எஸ்சிஎஸடி மாற்றுதிறனாளிகள் 15 வருடங்கள் 
ஓபிசி மாற்றுதிறனாளிகள் 13 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு அத்துடன் டாக்குமெண்ட் வெரிபிகேசன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தியன் ஆயில் கார்பரேசனின் அறிவிப்பினை சரியாக படித்து விண்ணப்பிக்கவும். விதிமுறைகளை முறையாக படித்து ஆன்லைனில் விண்ணப்பத்தை கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாக கொடுக்கவும்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 பொது மற்றும் ஒபிசி பிரிவின்ர கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற  பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை .

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைய லிங்க்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப இணைப்பு லிங்க் 

சார்ந்த பதிவுகள் :

ஹெச்பி பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job Opportunity Of Indian Oil

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia