இந்தியன் நேவியில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு வேலை அறிவிக்கை வெளியீடு

Posted By:

இந்தியன் நேவியில் டேட்டா எண்டரி குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவு பணிக்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. டேட்டா எண்டரியில் நீங்கள் கில்லியாக இருக்கிறிர்கள் என்றால் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்பு பெறும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு என்பது ஒரு கம்பீரமானது ஆகும் பாதுகாப்புத்துறையில் எந்த வேலையானலும் செய்ய கனவு கொண்டவர்கள் இதனை அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 25,2017 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 13 ஜனவரி 2018 வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 25 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவிற்கேற்ப 3 வருடம் 5 வருடம் ,10 வருடம் என வயது வரம்பிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு விதிமுறைகளின்படி பெறலாம்.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் குரூப் ஏ மற்றும் பி

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பணி 16 ஆகும்

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் கிரேடு ஏ பணிக்கு 14 காலிப்பணியிடங்கள்

கிரேடு பி 02 பணியிடங்கள் உள்ளன.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு கிரேடு ஏ பிரிவில் தொகை ரூபாய் 25,500 முதல் 81,100 தொகை சம்பளமாக பெறலாம். கிரேடு பி பிரிவில் ரூபாய் 29,200 தொகை முதல் 92,300 தொகை மாதச் சம்பளமாக பெறலாம்.

கல்வித் தகுதி:

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் நல்ல கிரேடுகளுடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் கிரேடு பி பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏ லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி புரோகிராமில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் நேவியில் தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து மற்றும் கணினி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் .

ஆன்லைனில் வேலை வாய்ப்புக்கு அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
விண்ணப்ப இணைப்பும் கொடுத்துள்ளோம். ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியில் பிஇ /பிடெக் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம் 

இந்தியன் ஆர்மியின் ஆர்டினன்ஸ் பேக்ட்ரியில் வேலை வாய்ப்பு

English summary
here article tells about Job Opportunity of Indian Navy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia