இந்திய கடற்படையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் 172 சார்ஜ்மென் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதனை நிரப்பும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நிர்வாக பணிகள் காரணமாக இந்த சார்ஜ்மேன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கடற்படை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, இப்பணியில் சேர விருப்பும் விண்ணப்பதாரர்கள் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே, இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பமும் திரும்ப பெறப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












