இந்திய கடற்படையில் காலியாக உள்ள செய்லர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கடற்படை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : செய்லர்
மொத்த காலிப் பணியிடம் : 2500
கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
உடற்தகுதி : குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி : 7 நிமிடங்களில் 1.6 கி.மீட்டர் தொலைவினை ஓடி கடக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.21,700 -முதல் ரூ. 69,100 வரை
தேர்வு முறை : கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு : எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2018 டிசம்பர் 30
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












