10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள்

Posted By:

சென்னை : கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படையில் கோர்ஸ் காமென்சிங் - எம்.ஆர் - 2018 பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி நுழைவின் அடிப்படையில் திருமணம் ஆகாத ஆண் இளைஞர்கள் சமையல்காரர், ஏவல் பணியாளர், சுகாதார ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். தேவையான எண்ணிக்கையில் தகுதியானவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருத்தல் அவசியமாகும்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள்

வயது வரம்பு -

விண்ணப்பதாரர்கள் 01.04.1997 மற்றும் 31.03.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி -

மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி -

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157செ.மீ உயரமும் உயரத்திற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பளவு 5செ.மீ விரியும் திறனுடன் இருக்க வேண்டும. பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/36 மற்றும் 6/36 என்ற அளவுக்குள்ளும் கண்ணாடியுடன் 6.9 மற்றும் 6/12 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 15 வார காலம் பயிற்சி பெற்று பின்னர் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவை சீப்பெட்டி ஆபீசர் பணி வரை பதவி உயர்வு பெறத்தக்க பணியிடங்களாகும்.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

09.07.2017ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்ககலாம்.

English summary
Above aticle mentioned that indian navy job 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia