இந்திய கடற்படையில் இளைஞர்கள் சேர்வதற்கு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. கடற்படையில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் விவரங்களைப் பெற joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தியக் கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவாக அமைந்துள்ளது. 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர், இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000 பேர் ஆவர்.
2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து "சாகர் ப்ரஹரி பல்" என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கப்பல்களும் இருக்கும் என இந்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜூலை 2009 தெரிவித்தது.
இந்தியக் கடற்படை 2014, மார்ச் மாத காலத்தில் 184 கப்பல்களை கொண்டிருந்தது. இதில் ஐ.என்.எஸ் விராட், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியனவும் 17 நீர்மூழ்கிக்கப்பல்களும் அடங்கும்.

நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன.
நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக் வருகிறது.
இந்த பெருமைமிகு இந்திய கடற்படையில்தான் தற்போது டிரேட்ஸ்மேன், சீனியர் டிரேட்ஸ்மேன், சார்ஜ்மேன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன
கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பிரிவில் 610, சீனியர் டிரேட்ஸ்மேன் பிரிவில் 258 (எலக்ட்ரிக்கல் 142, மெக்கானிக்கல் 26, கன்ஸ்ட்ரக்சன் 29, கார்டோகிராபிக் 11, ஆர்மமென்ட் 50), சார்ஜ்மேன் பிரிவில் 42 என மொத்தம் 910 இடங்கள் காலியாக உள்ளன.
கடற்படை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
கடற்படையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணிக்கு பி.எஸ்சி., சீனியர் டிரேட்ஸ்மேன் பணிக்கு டிப்ளமோ, ஆட்டோகேட், டிரேட்ஸ்மேன் பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
கடற்படை பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
31.12.2023 அடிப்படையில் சார்ஜ்மேன், டிரேட்ஸ்மேன் பணிக்கு 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
கடற்படை பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 295 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கடைசி நாள்:
கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31(31.12.2023) கடைசி நாளாகும்.
இணையதள முகவரி:
கடற்படை பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












