இந்திய கடற்படையில் ஐடிஐ (ITI) டிரேட் அப்ரென்டிஸ் களாக சேர்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஜனவரி 1-ம் தேதி (01.01.2024)அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.
இந்தியக் கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவாக அமைந்துள்ளது 2013-2014 காலகட்டத்தின்படி இதில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர், இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000 பேர் ஆவர்,
2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து "சாகர் பிரஹரி பல்" என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கலன்களும் இருக்கும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜூலை 2009 தெரிவித்தது.

இந்தியக் கடற்படை 2014, மார்ச் மாத காலத்தில் 184 கப்பல்களைக் கொண்டிருந்தது. இதில் ஐ.என்.எஸ் விராட், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியனவும், 17 நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும்
நம் நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்துகிறது.
ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பாதுகாத்தல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் போன்ற பணிகளையும் இவை உள்ளடக்கியுள்ளன.
நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்துக்கும் விரிவாக்கத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டு வருகிறது.
இந்தியக் கடற்படை தனக்கென்று பல முதன்மையான பணிகளைக் கொண்டுள்ளது:
மற்ற ராணுவப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, போர் மற்றும் அமைதி ஆகிய இரண்டு கால கட்டங்களிலும் இந்திய மக்கள் மற்றும் கடல் சார்ந்த உரிமை ஆகியவற்றுக்கு எல்லைகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுப்பது மற்றும் முறியடிப்பது ஆகிய செயல்பாடுகள், இந்தியாவின் கடல் சார்ந்த தேசிய அரசியல்,பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களில் மேம்பாட்டைக் கொணர்வதற்கான செயல்திட்டங்களில் ஈடுபடுதல், இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்புடன் இந்தியாவின் பொறுப்பில் உள்ள கடலோரப் பகுதிகளில் நல்ல ஸ்திரத்தன்மையையும் ஒழுங்கையும் நிலை நாட்டுதல்,
இந்தியாவின் கடலோர அண்டைப் பகுதிகளுக்கு (பேரிடர் நிவாரண உதவி உள்ளிட்ட) தேவையான உதவிகளை அளித்தல். மேம்பட்ட ஒரு உலகை உருவாக்கும் முயற்சியில் 'பன்முகப் பாதுகாப்பு முறை'களில் முக்கியமான பங்கு வகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த பெருமைமிகு இந்திய கடற்படையில் தான் ஐடிஐ டிரேட் அப்ரென்டிஸ் (ITI Trade Apprentice) பிரிவில் 275 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 க்குள் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, திறனறித் தேர்வு, மருத்துவத் தேர்வு என பல தேர்வுகள் உள்ளன.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்குhttps://indiannavy.nic.in/sites/default/files/Advertisement_for_enrollment_of_designated_trade_apprentices_for_2024_25_batch_at_Naval_Dockyard_Apprentices_School_Visakhapatnam.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் பதிவிறக்குதல் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












