சென்னை ஐஐடியில் பணியாற்ற விருப்பமா? அழைப்பு உங்களுக்குத்தான்...

Posted By: Kani

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள துணை ரெஜிஸ்டர், மெடிக்கல் ஆபீசர், உதவி ரெஜிஸ்டர், உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 19.05.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 25

காலியிட விபரம்:

துணை ரெஜிஸ்டர்-03
மெடிக்கல் ஆபீசர்-01
உதவி ரெஜிஸ்டர்-02
ஜூனியர் இன்ஜினியர்-05
ஜூனியர் டெக்னிகல் சூப்பரின்டண்டென்ட்-04
ஜூனியர் டெக்னீஷியன்- 10

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து அதிகபட்ச வயது மாறுபடும். ரெஜிஸ்ட்ரார் பதவிக்கு 45ம், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு 32ம், ஜூனியர் டெக்னீசியன் பதவிக்கு 27ம் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ரெஜிஸ்டிரார் பதவிக்கு, 55 சதவீதத்துடன் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் மேனேஜ்மென்ட், பைனான்ஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ், எச்.ஆர்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட், எஜூகேஷன் மேனேஜ்மென்ட் போன்ற சிறப்புத் தகுதி ஏதாவது ஒன்றைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு சிவில் அல்லது எலக்ட்ரிகல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப் பதோடு, 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் பதவிக்கு பி.எஸ்சி., (சி.எஸ், ஐ.டி., ), டிப்ளமோ (சி.எஸ், ஐ.டி.,) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டணம்: ரூ. 100.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-05-2018.

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஐஐடி இணையதளத்தில் பார்த்து கொள்ளவும்.

1 .அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள கேரியர் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு விதிமுறைகள்:

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விதிமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பிப்பது எப்படி என்பதை முழுமையாக படித்த பின் இடது பக்கத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

 

 

English summary
Indian Institute of Technology Madras invites online applications for non-teaching positions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia