12-வது தேர்ச்சியா? கைநிறைய சம்பளத்துடன் கடலோர காவல் படையில் வேலை!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள 260 Navik GD பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள 260 Navik GD பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12-வது தேர்ச்சியா? கைநிறைய சம்பளத்துடன் கடலோர காவல் படையில் வேலை!

இனச்சுழச்சியின் அடிப்படையில் இதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Indian Coast Guard பணியிட விபரங்கள்

Indian Coast Guard பணியிட விபரங்கள்

இந்திய கடலோர காவல் படைக்கான Navik GD பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுகளின் படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, UR பொதுப் பிரிவில் 113 காலிப் பணியிடங்களுக்கும், EWS பிரிவிற்கு 26, ஓபிசி பிரிவிற்கு 75, எஸ்.டி பிரிவிற்கு 13, எஸ்.சி பிரிவிற்கு 33 என மொத்தம் 260 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

Navik பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் படித்திருத்தல் அவசியம். எஸ்.டி, எஸ்.சி பிரிவு விண்ணப்பதாரர், விளையாட்டு வீரர்களுக்குக் கல்வித் தகுதி மதிப்பெண்களில் 5 சதவிகிதம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
 

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடத்திற்குக் குறைந்தபட்சம் 12 வயது நிரம்பியவர்கள் முதல் அதிகபட்சம் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்.டி, எஸ்.சி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Navik GD ஊதியம்:

Navik GD ஊதியம்:

கடலோர படையில் Navik GD பணிக்கு மாதம் 21,700 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். இதனைத் தவிர்த்து, இதர படிகளும், சலுகைகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவற்றில், எழுத்துத் தேர்வு 12-ஆம் வகுப்பு அளவிலான பாடங்களிலிருந்தே கேள்விகள் இடம்பெறும். மேலும், பொது அறிவு, திறனறிவு கேள்விகளும் உட்பட்டிருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியக் கடலோர காவல்படையில் (Indian Coast Guard) நேவிக் பணிக்கான தேர்வு விண்ணப்பப்பதிவு வரும் 2020 ஜனவரி 26 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.joinindiancoastguard.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று அதனைப் பூர்த்தி செய்து பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிட குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்:

முக்கிய நாட்கள்:

  • Indian Coast Guard அறிவிப்பு வெளியான நாள் : 4 ஜனவரி 2020
  • விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 26 ஜனவரி 2020
  • விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 2 பிப்ரவரி 2020
  • ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி - மார்ச் 2020 (தேதி அறிவிக்கப்படும்.)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Coast Guard Recruitment 2020: Apply for 260 Navik GD Posts joinindiancoastguard
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X