இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். இந்த படைப்பிரிவில் தற்போது '01-2019 பேட்ஜ்' அடிப்படையில் தகுதியான இளைஞர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களுக்கு இந்திய குடியுரிமை பெற்ற, ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடலோர காவல் படையில் வேலை!

பணி: ஜெனரல் டியூடி

வயதுவரம்பு: ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் 30க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெனரல் டியூடி (பைலட்)

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: கமர்சியல் பைலட் என்ட்ரி

கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டி.ஜி.சி.ஏ., அங்கீகாரம் பெற்ற கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1994 ஜூலை 1 முதல் 2000 ஜூன் 30க்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 ஜூன் 1.

மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Coast Guard invite application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+