இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 130-ம் மேற்பட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பப்பட உள்ளனர்.
வங்கி வேலைக்காக காத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:
Indian Bank Specialist Officer பணியில் தற்போது 138 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, உதவி மேலாளர் (கிரேடிட்) - 85, மேலாளர் (கிரேடிட்) - 15, மேலாளர் பாதுகாப்பு - 15, மேனேஜர் ஃபோர்க்ஸ் - 10, மேலாளர் (லீகல்) - 2, மேலாளர் டீலர் - 5, மேலாளர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 5, சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 1 உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி
உதவி மேலாளர் (கிரேடிட்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது பிஸ்னஸ், மேனேஜ்மென்ட், ஃபைனான்ஸ், பேங்கிங் ஆகியவற்றில் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலாளர் (கிரேடிட்) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இளநிலை பட்டப்படிப்பும், பிஸினஸ், மேனேஜ்மெண்ட், ஃபைனான்ஸ், பேங்கிங் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்
இந்தியன் வங்கியில் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்பணிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊதிய விபரம் இங்கே உள்ளது.
- Scale I - Rs. 23700 980/7 30560 1145/2 32850 1310/7 42020
- Scale II - 31705 1145/1 32850 1310/10 45950
- Scale III - Rs. 42020 1310/5 48570 1460/2 51490

Indian Bank Recruitment 2020: முக்கிய நாட்கள்:
- Indian Bank Recruitment 2020 அறிவிக்கை வெளியான நாள் : 22 ஜனவரி 2020
- விண்ணப்பம் தொடங்கிய நாள் : 22 ஜனவரி 2020
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10 பிப்ரவரி 2020
- தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - 20.02.2020 (உத்தேசமாக)
- ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 08.03.2020

விண்ணப்பக் கட்டணம்
இந்தியன் வங்கியின் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி, எஸ்.டி, எஸ்.சி, PWBD பிரிவினர் 100 ரூபாயினை கட்டணமாக செலுத்த வேண்டும். இதர பிரிவினர் 600 ரூபாயினை விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indianbank.in/ அல்லது https://ibpsonline.ibps.in/indbnsodec19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.