இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் 2019 ஜனவரி 11ம் தேதியன்று சென்னை பல்லாவரத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பணி :
- இளநிலை ஆணையரக அதிகாரி
- ஹவில்தார்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். இதுதவிர, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.
தேர்வு நடைபெறும் இடம் : சென்னை பல்லாவரம், இராணுவ முகாம்.
தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 11
தேர்வு முறை : உடல் திறன் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 2018 நவம்பர் 3 வரை மட்டுமே
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பப் படிவம் பெற : விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நவம்பர் 17ம் தேதிக்குப் பிறகு அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாக வெளியிடப்படும்.
இந்த அனுமதி அட்டையினை பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்து வரவேண்டும்.


Click it and Unblock the Notifications












