இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள லெப்டினன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு பொறியியல் முடித்த ஆண்கள் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய இராணுவம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : லெப்டினன்ட்
மொத்த காலிப் பணியிடங்கள் : 40
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கணினி பொறியியல், டெலிகம்யூனிகேசன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோவேவ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : கல்வி மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : பெங்களூர், அலகாபாத், போபால், பஞ்சாப்
உதவித் தொகை : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 42 வாரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 வரையில் உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.joinindianarmy.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindianarmy.nic.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












