பணத்தாள், நாணயங்களை அச்சிடும் பிரதான பணியை மேற்கொண்டு வரும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தின் நாசிக் ஆலையில், இளநிலை தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,780 ஊதியம் பெற முடியும். அதிகபட்சமாக, மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.1.03 லட்சம் பெற முடியும் என்பதை மறக்காதீங்க....! பிரிண்டிங் டெக்னாலஜி தெரிஞ்சிருந்தா போதும் உங்களுக்கு வேலை நிச்சயம்.
நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
காலிப்பணியிடம் எண்ணிக்கை: 108

பணி விவரம்
நல அலுவலர் (Welfare Officer)
இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் ( Junior Technician)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வி தகுதி
தொடர்புடைய துறைகளில், மாநில தொழிற் பயிற்சி குழுமம் (State Council for Vocational Training), மத்திய தொழிற் பயிற்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தகுதி காண் நிலை காலத்தில் (probation period) குறைந்தபட்சம் ரூ.18,780 முதல் அதிகபட்சம் ரூ.1.03 வரை மாத ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.07.2023 அன்று 30க்கு கீழும், 18க்கு மேலும் இருக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியலின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், வயது வரம்பில் மற்ற பிரிவினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகை, தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://ispnasik.spmcil.com என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும்.
தேர்வு உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள், சலுகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications












