இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில், காலியாக உள்ள 132 எக்ஸிகியூட்டிவ் காலிப் பணியிடங்களுக்கு, ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை (India Post)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
எக்ஸிகியூட்டிவ் (Executive)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 132
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2023
ஊதியம்
மாத ஊதியம், இதர சலுகைகள் குறித்த விரிவான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும். இப்பணியிடங்களில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக பெறுவர்.
தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், ஏதேனும் பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
மறக்காதீங்க...!
ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆன்லைன் தேர்வு, நேர்காணல் உள்பட மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.ippbonline.com/web/ippb/current-openings என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.300. எஸ்.சி.எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண விலக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கூடுதல் சந்தேகங்களுக்கு [email protected]. என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அணுகி தெளிவு பெறலாம்.
How to Apply IPPB post
விண்ணப்பிக்கும் முறை
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றி, மூன்று படி நிலைகள் கடந்து விண்ணப்பிக்க வேண்டும்.
ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்)
முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணி நேரம் வரை காத்திருக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் சமர்பிப்பு பணிகள் நிறைவு பெறும்.
கூடுதல் விவரங்களுக்கு கீழே கிளிக் ப்ளீஸ்....!
பணி பற்றிய முழு விபரங்களுக்கு
https://www.ippbonline.com/web/ippb/current-openings


Click it and Unblock the Notifications












