மத்திய அரசின் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியன் போஸ்ட் ஆப் பேமன்ட் பேங்க்கில்(ஐ.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான இடங்கள் காலியாக உள்ளன. தகுதியான நபர்களிடமிருந்து இந்தப் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ippbonline.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த பெருமைவாய்ந்த மத்திய அரசின் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியன் போஸ்ட் ஆப் பேமன்ட் பேங்க்கில் தான் (ஐ.பி.பி.பி) தற்போது பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.
இங்கு தற்போது எக்சிகியூட்டிவ் பிரிவில் உ.பி., 11, குஜராத் 8, பீஹார் 5, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் தலா 4, ம.பி., 3, தமிழகம், மஹாராஷ்டிரா தலா 2, டில்லி, ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா தலா 1 என மொத்தம் 47 இடங்கள் காலியாக உள்ளன.

அஞ்சல் வங்கி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ., (விற்பனை / மார்க்கெட்டிங்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அஞ்சல் வங்கி பணியிடங்களுக்கான வயது விவரம்: 1.3.2024 அடிப்படையில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்..
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்த வேலைகளுக்கு கட்டணமாக ரூ. 750 செலுத்தவேண்டும்.. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 150 செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்: வரும் 5.4.2024-ம் தேதிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு ippbonline.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












