இந்திய தபால் துறையின் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தபால் துறை
பணி : உதவி இயக்குநர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றதோடு Assistant Director / Desk Officer அல்லது அதற்கு இணையான துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












