India Post GDS Recruitment 2023:அஞ்சல் துறையில் 40 ஆயிரம் பணியிடங்கள்...!

அஞ்சல் துறையில் GDS பணி 2023

இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில், தமிழகத்தில் 3,167 காலியிடங்களுக்கு ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை (India Post)

மேலாண்மை : மத்திய அரசு

பத்தாம் வகுப்பு படித்திருந்தா போதும்...?

பணி விவரம்

கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40,899

தமிழக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 3167

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2023

ஊதியம்

மாத ஊதியம், இதர சலுகைகள் குறித்த விரிவான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

தகுதி என்ன?

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

இரு சக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம்.

சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

'கிராமின் தாக் சேவக்' பணிக்கு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வாயிலாக கணினி உருவாக்கும் 'மெரிட்' பட்டியல் வைத்து தேர்வு செய்யப்படுவர்.

பின்னர், அந்த 'மெரிட்' பட்டியல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

பத்தாம் வகுப்பு தேர்வில், 400 அல்லது 460க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பம் செய்யலாம். அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மறக்காதீங்க...!

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.indianpost.gov.in அல்லது https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண விலக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply GDS

விண்ணப்பிக்கும் முறை

அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றி, மூன்று படி நிலைகள் கடந்து விண்ணப்பிக்க வேண்டும்.

ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்)

முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.

கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணி நேரம் வரை காத்திருக்கலாம்.

எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் சமர்பிப்பு பணிகள் நிறைவு பெறும்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே கிளிக் ப்ளீஸ்....!

www.indianpost.gov.in

https://indiapostgdsonline.gov.in

https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
40,000 Posts in Postal Department 2023: Indian Postal Department has released a massive job notification for 40,899 vacancies. It is enough for 10th standard to fill the vacancies of 'Gramin Dak Sevaks' (Gramin Dak Sevaks) in post offices across the country.Only 3,167 vacancies are to be filled in Tamilnadu postal circle.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X