விண்ணப்பித்துவிட்டீர்களா... மெட்ராஸ் ஐஐடியில் பணி வாய்ப்பு

Written By: kaniselvam.p

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை வாரியான காலியிட விவரம்15
பணி உதவி பேராசிரியர் 
சம்பளம் ரூ.1,01500 
வயது 35-க்குள். 
கல்வித் தகுதி சம்பந்தப்பட்ட துறையில் பிஎச்.டி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன் அனுபவம் விரும்பந்தக்கது. 
பணி இணை பேராசிரியர் 
சம்பளம் ரூ.1,39,600
வயது 35க்குள். 
கல்வித் தகுதி சம்பந்தப்பட்ட துறையில் பிஎச்.டி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. உதவி பேராசிரியராக 6 ஆண்டுகள் பணியாற்றிய முன்அனுபவம் விரும்பந்தக்கது. 
பணி பேராசிரியர்
 
சம்பளம் ரூ.1,59,100
 
வயது 35க்குள். 
கல்வித் தகுதிசம்பந்தப்பட்ட துறையில் பிஎச்.டி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. 10 ஆண்டுகள் இணை பேராசிரியராக பணியாற்றிய முன் அனுபவம் விரும்பந்தக்கது. இதில் 4 ஆண்டுகள் ஐஐடி, ஐஐஎம்மில் பணியாற்றியிருக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Dean (Administration)
IIT Madras, Chennai-600 036

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-04-2018

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

3. துறை வாரியான காலியிட விவரம்

துறை வாரியான காலியிட விவரங்களை இதில் பெறலாம்.

4. துறை வாரியான தனிப்பட்ட காலியிட விவரம்

குறிப்பிட்ட துறை வாரியான காலியிட விவரங்களை இதில் பெறலாம்.

5. விண்ணப்பம்

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து பார்த்த பின் அதைப் பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

English summary
IIT Madras Recruitment 2018 – Apply Online Various Teaching Faculty Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia